வாசிப்பின் குறிப்புகள் 1


 #1 வாசிப்பின் குறிப்புகள்

இந்த ஆண்டின் முதல் புத்தகம் மாரி செல்வராஜ் அவர்களின் சிறுகதைகளான "காட்டுப்பேச்சிகளை காதலித்தவன்".

மொத்தம் 5 கதைகள் கொண்ட சிறிய புத்தகம்தான். மிகச் சிறப்பாக நான் பார்ப்பது எழுத்தாளராகவும், இயக்குனராகவும் மாரி எத்தனை முறை தன்னுடைய வாழ்வியலைச் சொன்னாலும் அது எனக்கு சலிப்பதே இல்லை.

இந்த புத்தகத்தில் ரொம்ப பிடித்த கதைகள் "கோழியாப்பண்ணை" மற்றும் கடைசி கதையான "முக்குளி வாத்துகளின் கதை". கோழியாப்பண்ணையில் நான் வாழ்ந்தேன் என்பதைவிட வேறு விதமாக மெச்சிக் கூறத் தெரியவில்லை. தாமிரபரணியில் என் கண்ணீரும் கலந்திருக்கக் கூடும்.

கடைசி கதை... காதல் யாருக்குத் தான் பிடிக்காது. அதுவும் சாதாரண காதல் அல்ல. ஆணவக்கொலை அல்லது ஊர்க்கலவரம் அல்லது காதலர்களின் தற்கொலை இப்படியான ஏதோவொரு முடிவோடு கூடிய ஒரு காதல்.

கொஞ்சம் விமர்சனம் எழுந்த கதை "நடுநிசி நதி". சராசரி ஆண் பார்வையில் பார்க்கப்படும் பெண்ணை, அதே பார்வையில் பார்க்கும் மற்றொரு ஆண் அதனை கவித்துவத்தோடு சொல்லி "நான் சராசரி ஆண் இல்லை" என்பதைக் கூறவரும் வகையில் எனக்கு அந்தக் கதை இருந்தது.

மொத்தமாக பார்க்கும் போது நான் படித்த மாரியின் மற்ற புத்தகங்களை ஒப்பிடும்போது இது கொஞ்சம் குறைவான அளவுதான் என்னை ஈர்த்தது.

Comments

Popular posts from this blog

உண்மையில் யார் குற்றவாளி?

பயணம் பயமுறுத்துகிறது...

மொழியின் ஓவியம்