Posts

Showing posts from February, 2026

பயணம் பயமுறுத்துகிறது...

பயணம் பயமுறுத்துகிறது... பயணம்... வாழ்க்கையில ரொம்ப பிடிச்ச ஒன்னு. நிறைய சம்பாதிக்கனும், நிறைய ஊர் சுத்தனும். இதழியல் படிச்சு அதுல ரிப்போர்ட்டர்-ஆ போனா நிறைய இடங்களுக்கு போகலாம், ஒக்காந்த இடத்துல இருந்தே வேல செய்யத் தேவையில்ல. இப்படி என்னோட தொழிலும் பயணம் சார்ந்து தான் இருக்கனும்-ன்னு 3,4 வருசத்துக்கு முன்னாடியே ஆசபட்டேன். இன்னிக்கும் அந்த ஆசை எல்லாம் இருக்கு. ஆனால், எனதருமை ஆண்களே... எதிர்பார்ப்பதைப் போல குறிப்பாக பெண்களுக்கு அவ்வளவு அழகியல் கொண்டதல்ல பயணம் . அது ஒரு அருவெறுப்பு, கண்ணீர், வேதனை, விவரிக்க முடியாத வலி, மீள முடியாத இறுக்கம், கண்ணுக்குப் புலப்படாத பயம்.  என்னைவிட யாரும் என்னை அதிகம் காதலித்துவிட முடியாது என்னும் கர்வம் கொண்டவள் நான். நான் அறிந்த தைரியமான பெண்களில் நானும் ஒருத்தி. இந்த தைரியத்தை நீண்ட காலம் நம்பி என்னையே நான் ஏமாற்றிக் கொள்ளப் போவதில்லை.  யாருக்கு எதிராக இந்த தைரியமும் கோபமும் துணிச்சலும் இந்தளவிற்கு வலுபெற்றதோ அதே ஆண்களின் ஒரே ஒரு பார்வை போதும் என்னை வலுவற்றவளாக மாற்ற. உடைத்து சுக்குநூறாக்கி, “நீ(பெண்) என்பது இரண்டு முலைகளைக் கொண்ட வெறும் உடல் மட...

வாசிப்பின் குறிப்புகள் 3

 #3 வாசிப்பின் குறிப்புகள் மீண்டும் ஒரு கே.ஆர்.மீரா. தேவதைகளின் மச்சங்கள், கருநீலம் என இரண்டு கதைகளைக் கொண்ட ஒரு புத்தகம்.  தேவதைகளின் மச்சங்கள் - கதையை ஏற்றுக் கொள்ள நெடுநேரம் தேவைப்பட்டது. இறுதியில் ஏற்றுக்கொள்வதற்கான நியாயங்களும் இருந்தது. காதல் என்னும் பெயரால் வன்புணரப்பட்ட பெண், காமத்தின் பெயரால் இரக்கத்தோடு கலப்படமில்லா காதலை அவள் சந்தித்த ஆண்களுக்கு அள்ளி வழங்கினாள். எதார்த்தங்களால் நிறைந்த கதை.   கருநீலம் - ஏதோ புராணக் கதைகள் படிப்பதுபோல் இருந்தது. படித்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் முடித்த கதை. துளியும் கதையோடு ஒன்றிப்போக முடியவில்லை . இந்தக் கதை துவங்குவதற்கு முன்பாகவே “சதி சாவித்திரிகளும் கண்ணியமான உத்தமபுருஷர்களும் இதை வாசிக்காதீர்கள்” என்ற முற்போக்கு முன்னறிவிப்போடு சேர்த்து புராண புனைவுகளுக்கும் இதில் இடமுண்டு என்றும் சொல்லி இருக்கலாம்.