வாசிப்பின் குறிப்புகள் 3

 #3 வாசிப்பின் குறிப்புகள்

மீண்டும் ஒரு கே.ஆர்.மீரா. தேவதைகளின் மச்சங்கள், கருநீலம் என இரண்டு கதைகளைக் கொண்ட ஒரு புத்தகம். 

தேவதைகளின் மச்சங்கள் - கதையை ஏற்றுக் கொள்ள நெடுநேரம் தேவைப்பட்டது. இறுதியில் ஏற்றுக்கொள்வதற்கான நியாயங்களும் இருந்தது. காதல் என்னும் பெயரால் வன்புணரப்பட்ட பெண், காமத்தின் பெயரால் இரக்கத்தோடு கலப்படமில்லா காதலை அவள் சந்தித்த ஆண்களுக்கு அள்ளி வழங்கினாள். எதார்த்தங்களால் நிறைந்த கதை. 

கருநீலம் - ஏதோ புராணக் கதைகள் படிப்பதுபோல் இருந்தது. படித்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் முடித்த கதை. துளியும் கதையோடு ஒன்றிப்போக முடியவில்லை. இந்தக் கதை துவங்குவதற்கு முன்பாகவே “சதி சாவித்திரிகளும் கண்ணியமான உத்தமபுருஷர்களும் இதை வாசிக்காதீர்கள்” என்ற முற்போக்கு முன்னறிவிப்போடு சேர்த்து புராண புனைவுகளுக்கும் இதில் இடமுண்டு என்றும் சொல்லி இருக்கலாம்.

Comments

Popular posts from this blog

உண்மையில் யார் குற்றவாளி?

பயணம் பயமுறுத்துகிறது...

மொழியின் ஓவியம்