Posts

உண்மையில் யார் குற்றவாளி?

எந்த கோணத்தில் அல்லது எந்த வடிவத்தில் வன்முறை நிகழ்ந்தாலும் வன்முறையை பற்றிய கருத்துகளையோ, அது சார்ந்த பாதிப்பு குறித்தோ பேசுவதற்குள், எப்படியாவது ஒரு வகையில் ஒடுக்கப்பட்டவர்களின் மீதான வன்மம் பரவத் துவங்கி குற்றங்கள் திசை திருப்பப்படுகிறது.  உதாரணத்திற்கு ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி இருந்தால், செய்தி பரவிய சில மணித்துளிகளிலேயே விவாதங்கள் தொடங்கிவிடும். குற்றவாளி யார்? குற்றங்கள் குறைக்க என்ன வழி? இதிலிருந்து பாதிக்கப்பட்ட பெண் எப்படி மீண்டு வருவது? அரசின் தவறு, கடமைகள் என்ன? என இப்படியெல்லாம் அந்த விவாதங்கள் இருக்காது. இவற்றை பேச வேண்டிய தேவை உள்ளவர்களும் கட்டாயத்தின் பேரில் கலாச்சார காவலர்களின் அவதூறுகளுக்கு பதிலளித்துக் கொண்டிருக்க வேண்டும். அவள் அந்த உடை போட்டிருக்க கூடாது - இல்லை அது அவளது உரிமை.  அந்த நேரத்தில் அங்கு சென்றிருக்கக் கூடாது - குற்றவாளிகள் மட்டும் செல்லலாமா?  அந்த பொண்ணு NO சொல்லி இருக்கனும் - அந்த பொண்ணு YES சொல்லவில்லை. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். தற்போது திருத்தணி அருகே ரயிலில் வடமாநில தொழிலாளி ஒருவரை நான்கு சிறார்கள் அரிவாளால் தாக்க...

ஆண்களின் ஆயுதம்

சொந்த மக்களோட உடல் குண்டுகளால துளைக்கப்பட்டுட்டு இருக்கு. பட்டினியால கொத்துக் கொத்தா பிஞ்சு குழந்தைகள்ல இருந்து எல்லாரும் செத்து மடியுறாங்க. எஞ்சி இருக்கவுங்க கண்ணு முன்னாடியே தன்னோட இனம் அழியுறத பாத்து கதறிட்டு இருக்காங்க. குண்டுகள் குறியில இருந்து தப்புனவங்களுக்கும் இப்ப வரைக்கும் உயிருக்கு உத்தரவாதம் இல்ல. இத்தனைக்கு மத்தியிலயும் உயிர கைல புடிச்சுகிட்டு இருக்கும் காஸா பெண்கள் ஒருவேளை உணவுக்காக பாலியல் துன்புறுத்தலுக்கு கட்டாயப்படுத்தப்படறாங்க. கொடூரத்தின் உச்சமாக சொந்த பகுதியில இருக்க ஆண்களும் இத பண்றாங்க.‌  உடைமைகளையும் சொந்தங்களையும் இழந்து உயிருள்ள பிணமாய் வாழும் பெண்களிடம் கூட ஆண்கள் பயன்படுத்தும் பேராயுதம் "ஆண்குறி". 

மொழியின் ஓவியம்

எனக்குப் பிறகு நான் அதிகம் நம்புவது இந்த ஓவியங்கள்(எழுத்து) தான். என்னை பக்குவப்படுத்தியது, பக்குவப்படுத்திக் கொண்டிருப்பது யாரோ ஒருவரினுடைய எழுத்து.  எத்தனைக்குப் பிறகும் என்னை உயிர்ப்புடன் மீண்டெழச்செய்யும் வல்லமை படைத்தது.   நான் வாசிக்கும் ஓவியத்தில் அன்றாடம் என்னைத் தேடும் வழக்கம் உடையவள் நான். அது என்னை சிரிக்க வைக்கும். அழ வைக்கும். அழுத கண்களை ஆற்றுப்படுத்தும். சிந்திக்கத் தூண்டும். காதலிக்க கற்றுக்கொடுக்கும். வெட்கமூட்டும். இவ்வாழ்வின் மீதான தேடலை அதிகரிக்கும். வலி நிறைந்த எழுத்துக்கள் என் காயங்களை சற்று ஆறச்செய்யும். கடந்து வந்த காயத்தின் தழும்புகளில் மீண்டும் அரிப்பூட்டச்செய்யும்.  இனம், மொழி தெரியாத மனிதர்களை நெருங்கிய உறவாக மாற்றும். அன்றாடம் சலித்த சமயத்தில் பரிட்சயமில்லா உலகில் உலவவிடும். அவ்வுலகிலும் கண்ணீருக்கு இடமிருக்கும்.  எனக்கான ஆகப்பெரும் ஆறுதல் என் எழுத்துகள். என் எழுத்துகள் என் பேச்சை மட்டும் தான் கேட்கும். என் சிந்தனைக்கு அப்பாற்பட்டு மயிரிழையும் யோசிக்காது. இதைவிட வேறென்ன காரணம் வேண்டும் இதை இவ்வளவு நேசிக்க.  என் எண்ணங்களுக்கு உயி...