ஆண்களின் ஆயுதம்
சொந்த மக்களோட உடல் குண்டுகளால துளைக்கப்பட்டுட்டு இருக்கு. பட்டினியால கொத்துக் கொத்தா பிஞ்சு குழந்தைகள்ல இருந்து எல்லாரும் செத்து மடியுறாங்க. எஞ்சி இருக்கவுங்க கண்ணு முன்னாடியே தன்னோட இனம் அழியுறத பாத்து கதறிட்டு இருக்காங்க. குண்டுகள் குறியில இருந்து தப்புனவங்களுக்கும் இப்ப வரைக்கும் உயிருக்கு உத்தரவாதம் இல்ல. இத்தனைக்கு மத்தியிலயும் உயிர கைல புடிச்சுகிட்டு இருக்கும் காஸா பெண்கள் ஒருவேளை உணவுக்காக பாலியல் துன்புறுத்தலுக்கு கட்டாயப்படுத்தப்படறாங்க. கொடூரத்தின் உச்சமாக சொந்த பகுதியில இருக்க ஆண்களும் இத பண்றாங்க. உடைமைகளையும் சொந்தங்களையும் இழந்து உயிருள்ள பிணமாய் வாழும் பெண்களிடம் கூட ஆண்கள் பயன்படுத்தும் பேராயுதம் "ஆண்குறி".