பயணம் பயமுறுத்துகிறது...
பயணம் பயமுறுத்துகிறது... பயணம்... வாழ்க்கையில ரொம்ப பிடிச்ச ஒன்னு. நிறைய சம்பாதிக்கனும், நிறைய ஊர் சுத்தனும். இதழியல் படிச்சு அதுல ரிப்போர்ட்டர்-ஆ போனா நிறைய இடங்களுக்கு போகலாம், ஒக்காந்த இடத்துல இருந்தே வேல செய்யத் தேவையில்ல. இப்படி என்னோட தொழிலும் பயணம் சார்ந்து தான் இருக்கனும்-ன்னு 3,4 வருசத்துக்கு முன்னாடியே ஆசபட்டேன். இன்னிக்கும் அந்த ஆசை எல்லாம் இருக்கு. ஆனால், எனதருமை ஆண்களே... எதிர்பார்ப்பதைப் போல குறிப்பாக பெண்களுக்கு அவ்வளவு அழகியல் கொண்டதல்ல பயணம் . அது ஒரு அருவெறுப்பு, கண்ணீர், வேதனை, விவரிக்க முடியாத வலி, மீள முடியாத இறுக்கம், கண்ணுக்குப் புலப்படாத பயம். என்னைவிட யாரும் என்னை அதிகம் காதலித்துவிட முடியாது என்னும் கர்வம் கொண்டவள் நான். நான் அறிந்த தைரியமான பெண்களில் நானும் ஒருத்தி. இந்த தைரியத்தை நீண்ட காலம் நம்பி என்னையே நான் ஏமாற்றிக் கொள்ளப் போவதில்லை. யாருக்கு எதிராக இந்த தைரியமும் கோபமும் துணிச்சலும் இந்தளவிற்கு வலுபெற்றதோ அதே ஆண்களின் ஒரே ஒரு பார்வை போதும் என்னை வலுவற்றவளாக மாற்ற. உடைத்து சுக்குநூறாக்கி, “நீ(பெண்) என்பது இரண்டு முலைகளைக் கொண்ட வெறும் உடல் மட...