Posts

Showing posts from January, 2026

வாசிப்பின் குறிப்புகள் 2

 #2 வாசிப்பின் குறிப்புகள்  மலையாள எழுத்தாளர் கே.ஆர்.மீரா-வின் தமிழாக்கம் செய்யப்பட்ட “அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்” நாவல்.  பெரும் எதிர்ப்பார்ப்போடு தொடங்கிய புத்தகம். தொடக்கத்திலேயே ஒரு இறுக்கத்தை புகுத்திவிட்டது. அது இன்னும் ஆயிரம் பக்கங்கள் எழுதி இருந்தாலும் தளர்த்த முடியாத ஒரு இறுக்கம். பாலியல் ரீதியில் விருப்பம் இல்லாமல் ஒருவன் பார்க்கும் பார்வையே வாழ்நாள் முழுக்க இறுக்கத்தைத் தரும் திறன் படைத்தது அல்லவா. அது கதைகளானாலும் விதிவிலக்கல்ல.  ஒரே ஒரு உவமையை கதை முழுவதும் பயன்படுத்தி இருந்தாலும், ஒவ்வொரு இடத்திலும் கச்சிதமாக அந்த உவமை பொருத்தப்பட்டிருந்தது.  மீரா-வின் எழுத்து எத்தனை விமர்சனங்களைத் தாண்டியும் புத்தகத்திற்குள் வாசகனை இழுத்துச் செல்லும் வல்லமை கொண்டது. அது என்னை வெறுப்பு கலந்த சலிப்போடு கடைசி பக்கத்தில் கடைசி வரி வரை இழுத்துச் சென்றது. என் பொறுமையையும் பெண்மையையும் சோதனை செய்தது.  எத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் காதலின் பெயரால் ஒரு ஆணை பெண் மன்னிப்பதென்பதும் ஒரு வித அடைமைத்தனம் தானே. அந்த அடிமைத்தனத்தை காதலோடும், காமத்தோடும், சொல்லி ...

வாசிப்பின் குறிப்புகள் 1

  #1 வாசிப்பின் குறிப்புகள் இந்த ஆண்டின் முதல் புத்தகம் மாரி செல்வராஜ் அவர்களின் சிறுகதைகளான "காட்டுப்பேச்சிகளை காதலித்தவன்". மொத்தம் 5 கதைகள் கொண்ட சிறிய புத்தகம்தான். மிகச் சிறப்பாக நான் பார்ப்பது எழுத்தாளராகவும், இயக்குனராகவும் மாரி எத்தனை முறை தன்னுடைய வாழ்வியலைச் சொன்னாலும் அது எனக்கு சலிப்பதே இல்லை. இந்த புத்தகத்தில் ரொம்ப பிடித்த கதைகள் "கோழியாப்பண்ணை" மற்றும் கடைசி கதையான "முக்குளி வாத்துகளின் கதை". கோழியாப்பண்ணையில் நான் வாழ்ந்தேன் என்பதைவிட வேறு விதமாக மெச்சிக் கூறத் தெரியவில்லை. தாமிரபரணியில் என் கண்ணீரும் கலந்திருக்கக் கூடும். கடைசி கதை... காதல் யாருக்குத் தான் பிடிக்காது. அதுவும் சாதாரண காதல் அல்ல. ஆணவக்கொலை அல்லது ஊர்க்கலவரம் அல்லது காதலர்களின் தற்கொலை இப்படியான ஏதோவொரு முடிவோடு கூடிய ஒரு காதல். கொஞ்சம் விமர்சனம் எழுந்த கதை "நடுநிசி நதி". சராசரி ஆண் பார்வையில் பார்க்கப்படும் பெண்ணை, அதே பார்வையில் பார்க்கும் மற்றொரு ஆண் அதனை கவித்துவத்தோடு சொல்லி "நான் சராசரி ஆண் இல்லை" என்பதைக் கூறவரும் வகையில் எனக்கு அந்தக் கதை இருந்தது....