வாசிப்பின் குறிப்புகள் 2

 #2 வாசிப்பின் குறிப்புகள் 

மலையாள எழுத்தாளர் கே.ஆர்.மீரா-வின் தமிழாக்கம் செய்யப்பட்ட “அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்” நாவல். 

பெரும் எதிர்ப்பார்ப்போடு தொடங்கிய புத்தகம்.

தொடக்கத்திலேயே ஒரு இறுக்கத்தை புகுத்திவிட்டது. அது இன்னும் ஆயிரம் பக்கங்கள் எழுதி இருந்தாலும் தளர்த்த முடியாத ஒரு இறுக்கம். பாலியல் ரீதியில் விருப்பம் இல்லாமல் ஒருவன் பார்க்கும் பார்வையே வாழ்நாள் முழுக்க இறுக்கத்தைத் தரும் திறன் படைத்தது அல்லவா. அது கதைகளானாலும் விதிவிலக்கல்ல. 

ஒரே ஒரு உவமையை கதை முழுவதும் பயன்படுத்தி இருந்தாலும், ஒவ்வொரு இடத்திலும் கச்சிதமாக அந்த உவமை பொருத்தப்பட்டிருந்தது. 

மீரா-வின் எழுத்து எத்தனை விமர்சனங்களைத் தாண்டியும் புத்தகத்திற்குள் வாசகனை இழுத்துச் செல்லும் வல்லமை கொண்டது. அது என்னை வெறுப்பு கலந்த சலிப்போடு கடைசி பக்கத்தில் கடைசி வரி வரை இழுத்துச் சென்றது. என் பொறுமையையும் பெண்மையையும் சோதனை செய்தது. 

எத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் காதலின் பெயரால் ஒரு ஆணை பெண் மன்னிப்பதென்பதும் ஒரு வித அடைமைத்தனம் தானே. அந்த அடிமைத்தனத்தை காதலோடும், காமத்தோடும், சொல்லி இருந்தார் மீரா. 

அந்த மன்னிப்பிற்கு பிறகான அவளது விருப்பத்தின் பெயரில் நடந்தேறிய கலவியையும் வன்புணர்வாகவே என்னால் உணர முடிந்தது. 

எந்த ஒரு இடத்திலும் மீரா அந்த மன்னிப்பை நியாயப்படுத்த முயற்சி செய்யவில்லை என்பது சற்று ஆறுதலாக உள்ளது.

பெரும் ஏமாற்றத்தைத் தந்த ஒரு புத்தகம். 

Comments

Popular posts from this blog

உண்மையில் யார் குற்றவாளி?

பயணம் பயமுறுத்துகிறது...

மொழியின் ஓவியம்